ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக ராஜேஷ்குமார் பொறுப்பேற்பு

ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக ராஜேஷ்குமார் பொறுப்பேற்றார்.

Update: 2023-10-01 14:05 GMT

ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (சி.வி.ஆர்.டி.இ.) இயக்குனராக பணியாற்றி வந்த வி.பாலமுருகன் ஓய்வுபெற்றார். இதையடுத்து புதிய இயக்குனராக ஜே.ராஜேஷ்குமார் பொறுப்பேற்றார்.

இவர் இதற்கு முன்பு போர் டாங்கி உருவாக்க குழுவின் இணை இயக்குனராகவும், இலகுரக டாங்கியின் உருவாக்க குழுவில் திட்ட இயக்குனராகவும் இருந்தார். தலைசிறந்த விஞ்ஞானி என்ற விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் 118 அர்ஜுன் எம்.பி.டி, மார்க்-1ஏ டாங்கிகளை துரிதமாக இந்திய ராணுவத்துக்கு வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இலகுரக டாங்கியின் முதல் முன்மாதிரியை வடிவமைப்பதில் பெரும் பங்களித்தார். எந்திரப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், பிரிட்டனில் உள்ள கிரான்பீல்ட் பல்கலைக்கழகத்தின் ராயல் மிலிட்டரி காலேஜ் ஆப் சயின்ஸ் கல்லூரியில் (ஆர்.எம்.சி.எஸ்) ராணுவ வாகன தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

Tags:    

மேலும் செய்திகள்