திருச்சியில் முதல் சிப்காட் தொழிற்பூங்கா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டத்தின் முதல் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

Update: 2022-12-29 10:58 GMT

சென்னை,

தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி சென்றுள்ளார். அங்கு இன்று காலை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மணப்பாறை மொண்டிப்பட்டியில், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் 2-வது அலகினை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார். மேலும் திருச்சி மாவட்டத்தின் முதல் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தையும் அவர் இன்று திறந்து வைத்தார்.

மேலும் ரூ.1,385 கோடி மதிப்பீட்டில் வன்மரக் கூழ் ஆலை, ரூ.47.44 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அலுவலக கட்டடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிப்காட் தொழிற்பூங்காவில் 4 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஆணையை முதல்-அமைச்சர் வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்