சின்ன வெங்காயம் சாகுபடி

சின்ன வெங்காயம் சாகுபடி

Update: 2022-06-02 16:00 GMT

பல்லடம்

பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட துவங்கினர்.

பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது, இந்த பகுதி விவசாயிகளின் முக்கிய விவசாயமாக சின்ன வெங்காய சாகுபடி உள்ளது.இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.இந்த நிலையில் ஆண்டு தோறும் வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்த சீசனில் சாகுபடி செய்யப்படும் வெங்காயத்தை இருப்பு வைக்க முடியும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் விளைச்சல் இல்லாத போது நல்ல விலை கிடைக்கும்.இந்த ஆண்டு வைகாசி பட்டம் துவங்கியுள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஈடுபட துவங்கி உள்ளனர். கடந்த கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்கவில்லை எனவே இந்த சீசனில் சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்பனை ஆகும் என்ற நம்பிக்கையில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்