ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

ஆலங்குளம், வத்திராயிருப்பு பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-06-18 00:23 IST

ஆலங்குளம், 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற ேகாரிக்கை எழுந்தது. இதனிடையே அ.தி.மு.க.விற்கு தலைமை ஏற்க வலியுறுத்தி ஆலங்குளத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.விற்கு அவர் தலைமை ஏற்க வேண்டும் என ஆலங்குளம், சங்கரமூர்த்திபட்டி, ராஜபாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். இ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல வத்திராயிருப்பு பகுதிகளிலும் பன்னீர்செல்வதிற்கு ஆதரவாக சுவரெட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


Tags:    

மேலும் செய்திகள்