மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு

கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-07-10 22:31 IST

கல்லூரி மாணவர்

கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலகுறியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சரவணன் (வயது 21). இவர் கிருஷ்ணகிரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 8-ந் தேதி இவர் மோட்டார்சைக்கிளில் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் பாலகுறி அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன் பேரில் போலீசார் விரைந்து ெசன்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்