சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி திடீர் சாவு - சிகிச்சைக்காக வந்தவருக்கு நேர்ந்த சோகம்

சென்னை விமான நிலையத்தில் சிகிச்சைக்காக வந்த வெளிநாட்டு பயணி திடீர் இறந்தார்.;

Update:2023-05-03 14:56 IST

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வங்காளதேசத்தைச் சேர்ந்த அலிம் உட்டின் (வயது 65). அவருடைய மகன்கள் முகமது மகியுதீன், முகமது அப்சருதீன் ஆகியோர் வந்தனர்.

அலிம் உட்டினுக்கு புற்று நோய் இருப்பதால் கடந்த சில தினங்களுக்கு முன் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு கொல்கத்தா வழியாக வங்காளதேசம் செல்ல மகன்களுடன் வந்திருந்தார்.

இந்த நிலையில் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து வங்காளதேசம் செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடித்து விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அலிம் உட்டின் மயங்கி கீழே விழுந்தார்.

இதையடுத்து பதறிப் போன மகன்கள் விமான நிலைய ஊழியர்கள் உதவியுடன் தந்தையை விமான நிலைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அலிம் உட்டினை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து அலிம் உட்டின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்