ஞாயிறு விடுமுறை: அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்...!

ஞாயிறு விடுமுறையையொட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Update: 2023-10-08 03:21 GMT

ராமேசுவரம்,

தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலையிலேயே பக்தர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வருகின்றனர். மேலும் கோவிலின் வடக்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து கிழக்கு ரத வீதி வாசல் வரையிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை தினத்தையொட்டி ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடலில் நீராடும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடல் பகுதியிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்