சுயம்பு முத்து மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா
குத்தாலம் அருகே சுயம்பு முத்து மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா;
குத்தாலம்:
குத்தாலம் அருகே வில்லியநல்லூர் ஊராட்சி சேண்டிருப்பு கிராமத்தில் பழமை வாய்ந்த சுயம்பு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி தெப்ப உற்சவ திருவிழா நடந்தது. முன்னதாக முத்து மாரியம்மனுக்கு காலை சிறப்பு ஹோமம், சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, மின் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்திற்கு முத்து மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கோவில் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.