வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது - பீகார் மாநில அதிகாரி பாலமுருகன் பேட்டி

வட மாநில தொழிலார்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ பரவிய விவகாரத்தில் தமிழக அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்தது என பீகார் மாநில குழு தெரிவித்துள்ளது;

Update:2023-03-07 09:51 IST

வட மாநில தொழிலார்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ பரவிய விவகாரத்தில் தமிழக அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்தது என  வடமாநில தொழிலாளர்களை சந்தித்து கருத்து கேட்ட பின்பீகார் மாநில குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து பீகார் மாநில அதிகாரி பாலமுருகன் கூறியதாவது ,

ஆரம்பத்தில் பயத்துடன் இருந்த பீகார் தொழிலார்கள் தற்போது பயம் குறைந்ததாக கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் அச்சமின்றி இருப்தாக பீகார் மாநில தொழிலாளர்கள் கூறியுள்ளனர் திருப்பூர் , கோவை , சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பீகார் மக்களிடம் பேசினோம். வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது. என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்