ரூ.3¾ கோடி வரி பாக்கி

ரூ.3¾ கோடி வரி பாக்கி தொடர்பாக கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2022-06-27 18:22 GMT

தேவகோட்டை, 

தேவகோட்டை நகராட்சி 135 கடைகளை வாடகைக்கு விட்டு உள்ளது. இந்த கடைகளில் இருந்து ரூ.3 கோடியே 75 லட்சம் நகராட்சிக்கு வாடகை பாக்கி உள்ளது. அதில் சில கடைகள் வாடகை பாக்கியை தவணை முறையில் செலுத்தி தக்க வைத்துக்கொண்டுள்ளன. இந்தநிலையில் தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் நகராட்சி வாடகை கடை வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வாடகை பாக்கியில்லாமல் செலுத்திவிட்டால் அரசிடம் வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து இருந்தார். 30 வாடகை கடைக்காரர்கள் பணத்தை செலுத் தாததால் நேற்று நகராட்சி கமிஷனர் சாந்தி உத்தரவின்பேரில் மேலாளர் தனலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்