தூக்குப்போட்டு டிரைவர் மனைவி தற்கொலை
சங்கராபுரம் அருகே தூக்குப்போட்டு டிரைவர் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.;
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள் சுபலட்சுமி(வயது 20). இவருக்கும் ராஜபாண்டலம் கிராமத்தை சேர்ந்த வாமாலை மகன் அஜித்குமார்(21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. துரைமுருகன்(1¼) என்ற ஆண் குழந்தை உள்ளது. அஜித்குமார் பால் ஏற்றி செல்லும் வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் சுபலட்சுமி தூக்குப்போட்டு கொண்டாா். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுபலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாய் சித்ரா, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சித்ராவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.