மாமல்லபுரம் கடற்கரையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
மாமல்லபுரம் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து உள்ளார்.;
கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் திவாகரன்.இவரது மகன் தினேஷ் (வயது 33). ஏற்றுமதியாளர்.சென்னை போரூரில் மனைவியுடன் வசித்து வருகிறார்.
மாமல்லபுரம் கடற்கரை விடுதி ஒன்றில் நடந்த நண்பரின் குடும்ப விழாவிற்கு மனைவியுடன் கலந்து கொண்டார்.நிகழ்ச்சி முடிந்த பின்னர் அருகில் அவருக்கு தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த கடற்கரை விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது நடந்து சென்ற தினேஷ் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.