முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வு..!

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை அதிகரித்து வந்தது.

Update: 2023-12-24 13:25 GMT

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வந்தது. இந்த நிலையில், புதிய உச்சமாக மேலும் 5 காசுகள் உயர்ந்து 5 ரூபாய் 75 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாகவும், வட மாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாகவும் முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்