கணவரைப் பிரிந்து தனியாக வாழும் பெண்களை குறிவைத்து ஏமாற்றிய இளைஞர்

கன்னியாகுமரி மாவட்டத்தில், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஒரே இளைஞர் மீது இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர்.;

Update:2022-12-31 10:34 IST

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஒரே இளைஞர் மீது இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

குழித்துறை அருகே உள்ள பாலவிளையைச் சேர்ந்த சோபியா என்பவரும், குளச்சல் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸி என்பவரும், அருமனையைச் சேர்ந்த ராஜு என்பவர் மீது புகார் அளித்துள்ளனர். இந்த இரு பெண்களும் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்கள்.

குமரியில் பல பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசி என்பவர், போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், கணவனை பிரிந்து வாழும் பெண்களைக் குறிவைத்து பணம், நகைகளை வாங்கி மோசடி செய்ததாக ராஜு மீது புகார்கள் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Full View

Tags:    

மேலும் செய்திகள்