திருக்குறள் ஒரு தலைபட்சமாக மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

திருக்குறள் சித்தாந்த ரீதியாக ஒரு தலைபட்சமாக மொழிபெயர்க்கப்பட்டு உள்ளதாக கவர்னர் ஆர்.என். ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2024-05-25 05:05 GMT

சென்னை,

திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கருதப்படுகிறது. அதனால், அன்றைய தினம் தமிழர்களில் ஒரு தரப்பினரால் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வைகாசி அனுஷம் மற்றும் திருவள்ளுவர் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி வழிபாடு நடத்தினார். அதன் பிறகு கவர்னர் மாளிகையில் 'திருவள்ளுவர் திருநாள்' விழா நடைபெற்றது.

இந்த விழாவில் டி.கே. ஹரி மற்றும் டி.கே. ஹேமா ஹரி ஆகியோர் எழுதிய "திருவள்ளுவர் - தமிழ்நாட்டின் புரவலர் துறவி" என்ற மின்னணு திருப்பு புத்தகத்தை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். பின்னர் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-

நான் இங்கு கவர்னராக வீற்றிருப்பதைவிட திருவள்ளுவரின் சீடனாக, மாணவனாக அமர்ந்திருப்பதிலேயே பேருவகை கொள்கிறேன். எனது பள்ளி பருவத்தில் திருவள்ளுவர் பற்றி முதன்முதலில் அறிந்தேன். 1964-ம் ஆண்டு ஒரு சரஸ்வதி பூஜை அன்று பள்ளி நூலகத்தில் இந்தி புத்தகம் ஒன்றில் பாரதத்தின் தென்கோடியில் ஒரு மகான் இருந்தார். அவர் திருவள்ளுவர் என்று அதில் போடப்பட்டு அவர் எழுதிய குறளும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டின் கவர்னராக பணியாற்றுவதால், திருக்குறளை ஆழமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது. திருக்குறளில் மகத்தான, ஆழமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. திருக்குறள் அறிவார்ந்த, ஆன்மிக மற்றும் சித்தாந்த நோக்கத்துடன் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. சித்தாந்த ரீதியான திருக்குறள் மொழிபெயர்ப்பு, ஒரு தலைபட்சமாக உள்ளது. திருக்குறளை பெரிதும் போற்றும் பிரதமர் மோடி, அதை உலக பொது நூலாக மாற்றும் செயலை நிச்சயம் செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்