திருவள்ளுவர் தினம்: டிடிவி தினகரன் வாழ்த்து
அனைத்து சமூகத்தினருக்கும் பொருந்தக் கூடிய கருத்துக் கருவூலமான திருக்குறளை படைத்த திருவள்ளுவர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்;
சென்னை,
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
சாதி, மதம், மொழி, இனத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினருக்கும் பொருந்தக் கூடிய கருத்துக் கருவூலமான திருக்குறளை படைத்த திருவள்ளுவரின் தினம் இன்று.
மக்கள் அனைவருக்கும் பயன் தரும் சிந்தனைகளை கொண்ட உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற இதயதெய்வம் அம்மா அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.