டிப்பர் லாரி-ஆம்னி பஸ் மோதல்

திண்டிவனம் அருகே டிப்பர் லாரி-ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. Conflict;

Update:2023-09-09 00:15 IST

திண்டிவனம், 

சென்னையில் இருந்து சுமார் 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி தனியார் ஆம்னி சொகுசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. பஸ்சை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வள்ளியம்பட்டி பகுதியை சேர்ந்த சக்திகுமார் (வயது 38) என்பவர் ஓட்டிச்சென்றார். மற்றொரு டிரைவராக மதுரையை சேர்ந்த சரவணன் (37) என்பவர் இருந்தார். திண்டிவனம் அடுத்த சாரம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, ஈச்சேரி கிராமத்தில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாரதவிதமாக ஆம்னி பஸ்சின் பக்கவாட்டில் மோதியது. இதில் ஆம்னி பஸ் மற்றும் லாரியி்ன் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்