திருப்பாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழா

பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள லோகநாயகி உடனுறை திருப்பாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-04-03 11:28 GMT

பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள லோகநாயகி உடனுறை திருப்பாலீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பின்னர் காலை மாலை பல்வேறு வாகனங்களில் சாமி அம்பாளுடன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட லோகநாயகி அம்மாளுடன் திருப்பாலீஸ்வரர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, பக்தர்கள் ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! கோஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்