இன்று தமிழகத்தில் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்

மழைக்காலங்களில் பரவும் நோய்களை கட்டுப்படுத்த தமிழகத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

Update: 2023-10-29 02:23 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்த மழைக்காலங்களில்தான் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். சாலைகள் மற்றும் வீடுகளை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரில் கொசுக்கள் உருவாகின்றன. இதன் மூலமே மலேரியா, டெங்கு, காலரா போன்ற நோய்கள் ஏற்படும். மேலும் சேற்றுப்புண் மற்றும் சளி போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படும்.

இதனால் டெங்கு, மலேரியா, காலரா போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இன்று 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நவம்பர், டிசம்பர் மாதங்களில் உள்ள ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் சுமார் 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் மழைக்கால நோய்கள் குறித்த பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சை உதவிகள் வழங்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்