வால்பாறையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

டேன்டீ தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சம்பளம் வழங்க கோரி வால்பாறையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-26 21:15 GMT

வால்பாறை

வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் ஆழியாறு சோதனைச்சாவடியில் இருந்து சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் விதித்த தடையை நீக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறை வணிகர் சம்மேளனம் சார்பில், பழைய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வால்பாறை நகராட்சி மார்க்கெட் கடைகளில் பராமரிப்பு பணிகளை உடனே செய்ய வேண்டும். படகு இல்லம், தாவரவியல் பூங்காவை பராமரிப்பு செய்து கொடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் தமிழக வணிகர் சம்மேளன நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்