சரக்கு வாகனங்கள் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல்

உடுமலை நகராட்சி வாரச்சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் மற்றும் காய்கறிகளை வாங்கி ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

Update: 2022-07-20 18:58 GMT


உடுமலை நகராட்சி வாரச்சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் மற்றும் காய்கறிகளை வாங்கி ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

வாரச்சந்தை

உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடக்கிறது. அத்துடன் இந்த வாரச்சந்தை வளாகத்தின் ஒரு பகுதியில் தினசரி காய்கறி சந்தையும், அதைத்தொடர்ந்து காய்கறி கமிஷன் மண்டிகளும் உள்ளன. உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் பல்வேறு காய்கறிகளை சரக்கு வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இந்த கமிஷன் மண்டிகளுக்கு கொண்டுவருகின்றனர்.

இவை கமிஷன் மண்டிகளில் ஏலத்தில் விடப்படும். இதில் ஏலத்தொகையில் கமிஷன் தொகை போக மீதி தொகை அந்தந்த விவசாயிகளிடம் வழங்கப்படும். ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டு காய்கறிகளை கொள்முதல் செய்து சரக்கு வாகனங்களில் ஏற்றிச்செல்கின்றனர்.

வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கமிஷன் மண்டிகளுக்கு தக்காளி மற்றும் இதர காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. இந்த வாரச்சந்தையின் ஒரு பகுதியில் நகராட்சி நூற்றாண்டு விழா நினைவாக சந்தையை மேம்படுத்துவதற்கான கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், அந்த பகுதியில் (தெற்கு பகுதி) உள்ள நுழைவு வாயில் வழியாக வாகனங்கள் கமிஷன் மண்டிகள் உள்ள பகுதிக்கு செல்ல முடியாது. அதனால் காய்கறிகளை கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு வரும் வாகனங்கள், ராஜேந்திரா சாலையில் வாரச்சந்தையின் வடக்குபகுதியில் உள்ள நுழைவுவாயில் வழியாக மட்டுமே கொண்டு செல்கின்றன.

ஒரே நேரத்தில் அதிக அளவு வாகனங்கள் வருவதால் போதிய இடவசதி இல்லாததால் விவசாயிகள், வியாபாரிகள், கமிஷன்மண்டி உரிமையாளர்கள், பணியாளர்கள், காய்கறிகளை சரக்கு வாகனங்களில் ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள் ஆகியோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காய்கறிகளை ஏற்றி வரும் சரக்கு வாகனங்களும் அதே வழியில்தான் வெளியே வருகின்றன.

உடுமலை நகராட்சி வாரச்சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் மற்றும் காய்கறிகளை வாங்கி ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.உடுமலை நகராட்சி வாரச்சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் மற்றும் காய்கறிகளை வாங்கி ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

அதனால் வாரச்சந்தையின் நுழைவு வாயில் பகுதியில் வாகன நெரிசல்ஏற்படுகிறது. நேற்றும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வாரச்சந்தை வளாகத்திற்குள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அந்த நேரத்தில் ராஜேந்திரா சாலையிலும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இ்ந்தநிலையில், வாரச்சந்தைக்குள் செல்வதற்காக காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள் ராஜேந்திரா சாலையில் நீண்ட தூரத்திற்கு வரிசையாக நின்றிருந்தன.

அதனால் ராஜேந்திரா சாலையில் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு முற்பகல் நேரத்தில் மட்டுமாவது போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்