தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு- தொண்டர்கள் உற்சாகம்

இந்தக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், செயல் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-12-14 06:37 GMT

சென்னை,

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. எனினும், தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் நலமாக இருப்பதாக கூறினார். அதன்படியே, விஜயகாந்த் உடல் நலம் பெற்றதையடுத்து கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை திருவேற்காட்டில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றுள்ளார். விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், செயல் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் எதிர்காலம் கருதியும் உடல் நிலையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்