விருதுநகரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
விருதுநகர் தேசபந்து திடலில் நாம் தமிழர் கட்சியினர் சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும், அதற்கு துணை போகும் மத்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.