பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை;

Update:2023-07-24 00:15 IST

திருக்கடையூர்:

திருக்கடையூர், ஆக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் திடீரென நேற்று மழை பெய்தது. இந்த மழையால் பருத்தி செடியில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதேபோல் பூம்புகார், திருவெண்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இந்த மழையால் வெப்பமான சூழ்நிலை மாறி குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்