செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணை

ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-01-30 01:33 GMT

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில்,அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும், வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு கோர்ட் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை முதன்மை அமர்வு கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் அமலாக்கத்துறையினர் திருத்தம் செய்துள்ளதாகவும், தங்களுக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்