சின்னசேலம்,
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் இன்தியாஸ் அன்சாரி (வயது 35). இவர் தனது குடும்பத்தினருடன் சின்னசேலம் அம்சாகுளம் பகுதியில் தங்கி, அங்குள்ள ஜும்மா பள்ளிவாசலில் பாங்கு ஓதும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இன்தியாஸ் அன்சாரி தனது மனைவி நிக்கத் பர்வீனை(29) ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு அம்மையகரம் நோக்கி புறப்பட்டார். சின்னசேலம் அடுத்த கூகையூர் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது, கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நிக்கத்பர்வீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்தியாஸ் அன்சாரி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.