தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-22 19:59 GMT

நாகர்கோவில்:

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில் கோட்டார் முதலியார்விளையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 48), தொழிலாளி. இவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு குழந்தை இல்லை என தெரிகிறது. இதனால், விஜயகுமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

மேலும், இதுபற்றி தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் கூறி கவலைப்பட்டு வந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் விஜயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்