நாய் கடித்து தொழிலாளி சாவு

மூலைக்கரைப்பட்டியில் நாய் கடித்து தொழிலாளி இறந்தார்.;

Update:2023-01-19 02:50 IST

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்தவர் பழனி மகன் சந்திரன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு காஞ்சனா (42) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது சந்திரனை நாய் கடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த சந்திரனை அவரது மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை திடீரென மயங்கிய சந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காஞ்சனா மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்