அச்சரப்பாக்கம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி

அச்சரப்பாக்கம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.;

Update:2022-06-24 14:56 IST

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள மேலவளம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 32). கூலித்தொழிலாளியான இவர் அச்சரப்பாக்கம் அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் பாலாஜி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலாஜி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்