முதுகுளத்தூர் ஆற்றுப்பாலம் அருகே இறந்து கிடந்த தொழிலாளி

முதுகுளத்தூர் ஆற்றுப்பாலம் அருகே தொழிலாளி இறந்து கிடந்தார்.

Update: 2022-05-23 19:10 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் ஆற்றுப்பாலம் டாஸ்மாக் கடை அருகே காட்டு பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ேமாகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் மதுரை புதூரை சேர்ந்த தொழிலாளியான சரணவன்(வயது 43) என்பது தெரிய வந்தது. இவர் முதுகுளத்தூரில் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்து உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மது குடித்த தகராறால் வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை என அவரது மனைவி பத்மபிரியா போலீசில் தெரிவித்தார். தொடர்ந்து அவரது சாவு குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்