ஏற்காடு மலர் கண்காட்சி 30ம் தேதி வரை நீட்டிப்பு

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-25 13:30 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். இதையடுத்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறும்.

அதன்படி ஏற்காட்டில் 47-வது மலர் கண்காட்சி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சி தொடர்ந்து வருகிற 26-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஏற்காட்டிற்கு வந்த வண்ணமாக உள்ளனர்.இந்நிலையில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்