மின்னல் தாக்கி இளம் பெண் பலி

ஆலங்குடி அருகே மின்னல் தாக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-09-18 23:53 IST

ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி பிரகதம்பாள்புரத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவருடைய மகள் பிரியங்கா (வயது 26). இவர் பி.எஸ்சி. கலை அறிவியல் படித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று மாலை தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் பிரியங்கா உடல் கருகியது.

இதில், பலத்த காயம் அடைந்த பிரியங்காவை அருகே இருந்த தொழிலாளர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்