கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆவூரை சேர்ந்தவர் ரோகிணி (வயது 20). இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே தச்சூரில் உள்ள தனியார் உணவு பொருட்களுக்கான குடோனில் வேலை செய்து வருகிறார். அதே குடோனில் பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவரும் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், ரோகிணியுடன் ஏற்பட்ட தகராறில் விக்னேஷ் அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் அடிப்படையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.