பொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று

பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-07-10 01:49 GMT
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  வேர்ல்டோமீட்டர்ஸ் புள்ளி விவரங்களின் படி பொலிவியா நாட்டில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொலிவியா நாட்டு அதிபர்  ஜினைன் அனேஸ்- க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரொனா தொற்று  உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அனேஸ், நலமுடன் இருப்பதாகவும், தனது பணிகளை தனிமைப்படுத்திக்கொண்டபடியே தொடர இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார். 

பொலிவியாவில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 7 மந்திரிகள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

மேலும் செய்திகள்