உளவுத் தகவல்களை ரஷ்யாவிற்கு வழங்கினாரா டிரம்ப்?

தன்னை சந்திக்க வந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் அமெரிக்கா சேகரித்த இரகசிய உளவுத் தகவல்களை அதிபர் டிரம்ப் வெளியிட்டார் எனும் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2017-05-16 00:47 GMT
வாஷிங்டன்

அமெரிக்காவின் பிரபல நாளேடான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தைப் பற்றிய செய்தியை டிரம்ப் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ்விடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இத்தகவல் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி நாட்டிடம் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் இத்தகவலை மறுத்துள்ளார். அதிபர் அப்படி எந்தத்தகவலையும் ரஷ்ய அமைச்சரிடம் வழங்கவில்லை என்றார் அவர்.

அதிபர் இரகசியத் தகவல்களை வழங்கியதாக சொல்லப்பட்டதற்கு பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் அதிபரின் இச்செயல் அதுவும் ரஷ்யாவிடம் இரகசியத் தகவல்களை வழங்கியது என்பது மன்னிக்கத்தக்கதல்ல என்று உளவுத்துறைக்கான கமிட்டியின் ஜனநாயககட்சி உறுப்பினர் மார்க் வார்னர் தெரிவித்தார்.

இதனிடையே வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது என்று ஐநாவின் பாதுகாப்பு அவை கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சோதனைகள் தொடரும் பட்சத்தில் மேற்கொண்டு தடைகளை வட கொரியா சந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கையையும் சபை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்