ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

ஜப்பானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது.

Update: 2018-10-29 05:09 GMT
டோக்கியோ, 
ஜப்பானின் இசூ தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.27 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. நெருப்பு வளையம் என்று  கூறப்படும் பகுதியில்,  ஜப்பான் அமைந்துள்ளதால், அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு, ஜப்பானில் ரிக்டர் அளவில் 9 என்ற அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 15 ஆயிரம் வரை பலியாகினர்.

மேலும் செய்திகள்