உலகைச்சுற்றி...

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சினபங்க் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-05-07 22:30 GMT
* தென்கொரியா அதிபர் மூன் ஜே இன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அண்மையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது குறித்தும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழல் குறித்தும் இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினர்.

* ஆப்கானிஸ்தானில் பக்லான் மாகாணத்தின் தலைநகர் புல் இ கும்ரி நகரில் தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து, பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 13 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

* ரஷியாவின் பெர்ம் பிரதேசத்தில் உள்ள பெரன்ஷ்கி நகரில் ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட தீயில் சிக்கி 3 பேர் உயிர் இழந்தனர்.

* அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியான ரமேஷ் கிரிஷ் நாதன் (வயது 37) என்பவர் விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதாக கூறி பலரிடம் பணத்தை முதலீடாக பெற்று, அதனை தனது சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

* இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சினபங்க் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 2 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு கரும்புகை மண்டலம் உருவாகி இருக்கிறது. எனவே எரிமலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என பேரிடர் மீட்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்