முதல் வெளிநாட்டு பயணமாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பூடான் சென்றார்

முதல் வெளிநாட்டு பயணமாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பூடான் நாட்டுக்கு சென்றார்.

Update: 2019-06-08 04:09 GMT
திம்பு,

பிரதமர் மோடியின் புதிய மந்திரி சபையில் வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்பட்டவர் ஜெய்சங்கர். இவர் தனது பொறுப்புகளை ஏற்றபின் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று பூடானுக்கு சென்றார். இந்தியாவின் வடக்கில் இருக்கும் அண்டை நாடான பூடானுடன் உறவை மேம்படுத்தும் வகையில் ஜெய்சங்கர் இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த 2 நாள் பயணத்தில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் மற்றும் பிரதமர் லேடே ஷெரிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஜெய்சங்கர், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அப்போது விவாதிக்கிறார்.

பிரதமர் மோடி கடந்த 2014–ம் ஆண்டு பதவியேற்றபின் முதல் வெளிநாட்டு பயணமாக பூடானுக்குத்தான் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்