காஷ்மீரில் கைது நடவடிக்கை: அமெரிக்க இந்திய பெண் எம்.பி. கவலை

காஷ்மீரில் கைது நடவடிக்கை குறித்து, அமெரிக்க இந்திய பெண் எம்.பி.யான பிரமிளா ஜெயபால் கவலை தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-25 19:38 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில், வாஷிங்டன் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், பிரமிளா ஜெயபால். அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அமெரிக்க இந்தியர் இவரே ஆவார்.

காஷ்மீரில் கைது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு பிரமிளா ஜெயபால் கவலை தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “ஜனநாயகத்துக்கு வெளிப்படைத்தன்மை, கருத்து சுதந்திரம், சட்டசபை சுதந்திரம் ஆகியவை தேவை. மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட இவை அத்தியாவசியம் ஆகும். காஷ்மீரில் 2 ஆயிரம் பேரை இந்திய அரசு கைது செய்துள்ளதாக வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன” என்று கூறியுள்ளார்.

ஆடம் ஸ்சிப் என்ற அமெரிக்க எம்.பி., காஷ்மீரில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு எம்.பி.யான பீட்டர் கிங், நியூயார்க்கில் இந்திய துணை தூதரை சந்தித்து காஷ்மீர் பிரச்சினை பற்றி விவாதித்தார்.

மேலும் செய்திகள்