ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 100 -ஐ எட்டியது

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டி உள்ளது.

Update: 2019-10-06 22:32 GMT

* மங்கோலியா நாட்டின் உலான் பதோர் நகரில் நிலக்கரியை எரித்து குளிர்காய்ந்தபோது, எதிர்பாராதவிதமாக தீ விபத்து நேரிட்டது. இதில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் தீயில் கருகி உயிர் இழந்தனர். மேலும் 16 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

* ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பலியானோரின் எண்ணிக்கை 100 -ஐ எட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் ஈராக் அரசுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வன்முறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளது.

* ஜோர்டானில் சம்பள உயர்வு கேட்டு அரசு ஆசிரியர்கள் நடத்தி வந்த நீண்டகால போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு (2020) ஜனவரி முதல் ஆசிரியர்களின் சம்பளம் அவர்களின் தகுதியின் அடிப்படையில் 35 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை உயர்த்தப்படும் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

* அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை திருட ஈரானை சேர்ந்த பாஸ்பரஸ் என்ற ஹேக்கர் குழு முயற்சி செய்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது. அந்த குழு இதுவரை 2,700-க்கும் மேற்பட்ட முறை இதற்கு முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் யார் அந்த வேட்பாளர்? என்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்