நாட்டை விமர்சிக்கும் நபர்களை ரெய்டுகளால், பயங்கரவாத குற்றச்சாட்டுகளால் அமைதிப்படுத்தும் பாகிஸ்தான்

நாட்டை விமர்சிக்கும் நபர்களை ரெய்டுகளால், பயங்கரவாத குற்றச்சாட்டுகளால் பாகிஸ்தான் அமைதிப்படுத்தி வருகிறது.

Update: 2019-10-19 11:00 GMT
இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில்  தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு  உள்ளான பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் குலலை இஸ்மாயில் அமெரிக்காவுக்கு தப்பி  சென்றார். அங்கு  நியூயார்க்கின் பரபரப்பான தெருக்களில் இஸ்மாயில் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களுக்காக குரல் கொடுத்தார்.  நியூயார்க்கில்  ஐநா பொதுக்குழு கூட்டத்திற்கு  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வந்த போது அவருக்கு  எதிராக போராட்டம் நடத்தினார்.

புகலிடம் கோரி அமெரிக்காவிற்கு தப்பிச் சென்ற மனித உரிமை ஆர்வலர் குலலை இஸ்மாயில்  வீடு இஸ்லாமாபாத்தில் உள்ளது. அவரது வீட்டை நேற்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர்  சோதனை செய்ய முயன்றனர். குலலை இஸ்மாயிலின் வயதான பெற்றோரை வெளியே வருமாறு கூறினர்.  ஆனால் குலலை இஸ்மாயிலின் தந்தை  ஓய்வுபெற்ற பேராசிரியர் இஸ்மாயிலின் தந்தை முகமது  உங்கள் கைகளில் ஆயுதங்கள் உள்ளன, சீருடை இல்லை என்று நான் அவர்களிடம் சொன்னேன், நான் வெளியே வரமாட்டேன் என்று கூறி உள்ளார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் திரும்பி விட்டனர்.

குலலை இஸ்மாயிலின் பெற்றோர் பயங்கரவாதத்திற்கு நிதியளித்த குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் மகன் இஸ்மாயில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் கொடுத்ததாக  கூறப்படுகிறது. அவர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்து தற்போது ஜாமீனில் உள்ளனர், ஆனால் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்