கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதுமானது இல்லை ; உலக சுகாதார அமைப்பு

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் பலன் தராது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2020-03-26 03:12 GMT
ஜெனீவா, 

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயேசுஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;- கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது. 

ஊரடங்கு மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க வைப்பது சுகாதாரத்துறை மீதான அழுத்தத்தைக் குறைக்கும். எனினும், கொரோனாவை ஒழிக்க இது உதவாது. ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தை கொரோனாவை ஒழிக்கும் பணியில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். 2-வது வாய்ப்பை நீங்கள் உருவாக்கியுள்ள இந்த நேரத்தில், இதை எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதுதான் கேள்வியாக உள்ளது.  

கடுமையான  நடவடிக்கைகள்,சோதனைகள் ஆகியவை தொற்றைக் கண்டறிய சிறந்த வழியாக மட்டுமல்லாமல்  தொற்றைத் தடுக்கவும் சிறந்த வழியாக உள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரிடம் இருந்து யாருக்குத் தொற்று பரவியது என்பதைக் கண்டறிய தெளிவான திட்டம் தேவை” என்றார். 

மேலும் செய்திகள்