5 ஆண்டுகளுக்கு பிறகு தென்கொரியா, சீனா, ஜப்பான் பங்கேற்கும் உச்சி மாநாடு

தென் கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மே 26ம் தேதி சந்திக்க உள்ளனர்.

Update: 2024-05-23 22:42 GMT

கோப்புப்படம்

சியோல்,

தென்கொரியா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகள் இடையேயான முத்தரப்பு உச்சி மாநாடு 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி அந்த நாடுகளின் தலைவர்கள் ஆண்டுதோறும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த சந்திப்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதால் இந்த முத்தரப்பு உச்சி மாநாடு 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெற உள்ளது.

அதன்படி இந்த ஆண்டுக்கான முத்தரப்பு உச்சிமாநாடு தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெறுகிறது. இதில் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், சீன பிரதமர் லீ கியாங் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் சந்திக்க உள்ளனர். அப்போது தென் சீனக்கடல் விவகாரம், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்