அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தெளிவு இல்லாதது உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் - ரஷியா

அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தெளிவு இல்லாதது உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் என ரஷியா கூறி உள்ளது.

Update: 2020-11-05 12:02 GMT
மாஸ்கோ

டிரம்பை இரண்டாவது முறையாக பதவியில் அமர்த்தலாமா அல்லது அவருக்கு பதிலாக பிடனை பதவியில் அமர்த்தலாமா என்பதை தீர்மானிக்க வாக்காளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வாக்களித்தனர். சமீபத்திய தரவுகளின்படி, பிடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். பிடனுக்கு 50.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி டிரம்பிற்கு 48.3 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

ஒரு அதிபராக தேர்தலில் நின்று தோல்வியுற்றால் தனக்கு பெருத்த அவமானம் என்று கருதுகிறார் டிரம்ப். ஜனநாயக அரசியலில் இது இயல்பானது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்.

இதனிடையே  வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி டிரம்ப் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமது மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தெளிவு இல்லாதது உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் என ரஷியா கூறி உள்ளது.

நவம்பர் 3 ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தெளிவு இல்லாதது உலகப் பொருளாதாரம் மற்றும் உலகில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ரஷியா வியாழக்கிழமை கூறியது, ஆனால் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

மேலும் செய்திகள்