சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவு

சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.

Update: 2021-01-10 03:45 GMT
ஹோனியரா,

சாலமன் தீவில் கிரகிரா நகரில் இருந்து தென்கிழக்கே 77 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 11.01 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இந்நிலநடுக்கம் 11.06 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்