உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.46 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.46- கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2021-03-01 01:23 GMT
ஜெனீவா,

கொரோனா வைரஸ் முதன் முதலாக வெளிப்பட்டு ஒரு ஆண்டை கடந்து விட்டாலும், தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. நாளுக்கு நாள் வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,46,72,333- ஆக உயர்ந்துள்ளது. 

வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,42,553- ஆக இருக்கிறது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 22 லட்சத்து 8 ஆயிரத்து 716- ஆக  உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,19,01,064- ஆக உள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களில் 90 ஆயிரத்து 290- பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் செய்திகள்