கொரோனாவுக்கு எதிரான போர்; அவசரகால உதவிகளை வழங்க முன் வந்த அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி நன்றி

கொரோனாவுக்கு எதிரான போரில் அவசரகால உதவிகளை வழங்க முன் வந்த அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டார்.

Update: 2021-04-26 23:46 GMT
வாஷிங்டன்,

உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவும், இந்தியாவும் முன்னணியில் உள்ளன.  நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது.

உலக நாடுகளில் இல்லாத வகையில் நாள்தோறும் 3 லட்சத்திற்கு கூடுதலான பாதிப்புகள் இந்தியாவில் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.  இவற்றை எதிர்கொள்வது பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்   செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், பிரதமர் மோடியுடன் பேசினேன்.  கொரோனாவுக்கு எதிரான போரில் அவசரகால உதவிகள் மற்றும் மூல பொருட்களை வழங்குவதற்கு அமெரிக்கா முழுஅளவில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் என உறுதி அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

எங்களுக்கான இக்கட்டான நேரத்தில் இந்தியா உதவியாக இருந்தது.  அவர்களுக்கு உதவியாக நாங்கள் இருப்போம் என்றும் பைடன் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபருடன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு தேவையான மூல பொருட்களை வழங்க முன்வந்து பெருந்தொற்றுக்கு எதிரான போரில் ஆதரவு வழங்கியதற்காக நன்றி என தெரிவித்து உள்ளார.

இரு நாடுகளிலும் கொரோனா சூழல் பற்றி நாங்கள் விரிவாக ஆலோசனை  மேற்கொண்டோம்.  இந்தியாவுக்கு ஆதரவு வழங்கியதற்காக அமெரிக்க அரசுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டேன் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்