ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.

Update: 2021-06-01 01:51 GMT
ஹோன்சு,

ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரில் கிழக்கு கடலோர பகுதியில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

ஜப்பானில் நேற்று முன்தினம் தகஹாகி நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 125 கி.மீ. தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி இருந்தது.

மேலும் செய்திகள்