இலங்கையில் அஞ்சலி நிகழ்ச்சி: தமிழ் பத்திரிகையாளர் மீது தாக்குதல்: ராணுவ வீரர்கள் 3 பேர் கைது

தமிழ் பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-01 01:29 GMT
கோப்புப்படம்
கொழும்பு, 

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துடனான இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் படுகொலை கொல்லப்பட்டனர். யுத்தத்தின் கடைசிக்கட்ட களமான முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் கோரக் காட்சிகள் அரங்கேறின.

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நவம்பர் கடைசி வாரத்தில் நடைபெறும். ஆனால் அவ்வாறு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு இலங்கை ராணுவமும், போலீசாரும் அனுமதிப்பது இல்லை. 

இந்நிலையில் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நினைவு அஞ்சலியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் என்ற தமிழ்ப் பத்திரிகையாளர் மீது அங்கிருந்த ராணுவ வீரர்கள் சிலர் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பத்திரிகையாளர் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இலங்கை ஊடகத்துறை மந்திரி டல்லஸ் அலகப்பெருமாவுக்கு ஊடக ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் மின்னஞ்சல் அனுப்பி உள்ளது.

இதற்கிடையில் தமிழ்ப் பத்திரிகையாளர் தாக்கப்பட்டது தொடர்பாக 3 ராணுவ வீரர்களை முல்லைத்தீவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்