உலகின் முதல் குறுஞ்செய்தி: ரூ.91 லட்சத்திற்கு ஏலம்

ஏலத்தின் மூலம் கிடைத்த முழுத் தொகையும் ஐநா அகதிகள் முகமைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-22 06:59 GMT
பாரிஸ்,

1992-ஆம் ஆண்டு வோடோபோன்  நிறுவனத்தின் ஊழியர் ஒருவரால் ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவருக்கு உலகின் முதல்  குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்பட்டது. உலகின் முதல் குறுஞ்செய்தியில் 14 எழுத்துகள் இருந்தன. மேரி கிறிஸ்துமஸ் (Merry Christmas) என்பதே அந்த வாசகமாகும்.

இந்த நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடோபோன்  உலகின் முதல் குறுஞ்செய்தியை  ஏலம் விடப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பை வெளியிட்டது.இதனை அந்த நிறுவனம் சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவித்தது .இந்த  ஏலத்தில் கிடைக்கும் தொகையை அகதிகளுக்கு உதவுவதற்காக நன்கொடையாக அளிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்த குறுஞ்செய்தியின் ஏலம் பிரான்சில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தை அகுட்டேஸ் ஏல நிறுவனம் நடத்தியது. இந்த ஏலத்தில் அந்த குறுஞ்செய்தி சுமார்  ரூ.91 லட்சத்திற்கு  விற்பனையாகியுள்ளது.ஏலத்தின் மூலம் கிடைத்த முழுத் தொகையும் ஐநா அகதிகள் முகமைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்